Tuesday, August 26, 2014
தோஷம் கழிப்பதாக விவசாயியிடம் பணம் வாங்கிக் கொண்டு தலைமறைவான ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் புதுவலசு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற முருகேஷ் (47). இவர் சோலார் அடுத்த நகராட்சி நகரில் அலுவலகம் அமைத்து ஜோதிடம் பார்த்து வருகிறார். திருமண தோஷம், பில்லி சூனியம் மற்றும் பல்வேறு தோஷங்களை நீக்குவதாக கூறி வந்துள்ளார்.
இவரை மொடக்குறிச்சி அடுத்த கூத்தம்பாளையத்தை சேர்ந்த விவசாயி குழந்தை வேல் (55) என்பவர் தோஷம் நீக்குவதற்காக அணுகியுள்ளார். தோஷத்தை நீக்கினால் உங்கள் வாழ்க்கையில் நலம் உண்டாகும் என்று கூறிய ஜோதிடர் விஜய், அதற்கு ரூ.5 ஆயிரம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட குழந்தைவேல், முன்பணமாக ரூ.2 ஆயிரத்தை நேற்று முன்தினம் கொடுத்துள்ளார். மீதி பணத்துடன் நாளை (நேற்று) வந்தால் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தோஷம் கழித்து விடலாம் என ஜோதிடர் தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று மீதி பணம் ரூ.3 ஆயிரத்துடன் குழந்தைவேல் நகராட்சி நகரில் உள்ள ஜோதிட அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அங்கு ஜோதிடர் இல்லை. அலுவலகம் பூட்டிக் கிடந்தது. வீட்டில் போய் பார்த்தபோது அங்கும் அவர் இல்லை. தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிய ஜோதிடர், தன்னை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டதாக மொடக்குறிச்சி போலீசில் குழந்தைவேல் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மேலும் பலரிடம் இதே போல தோஷம் கழிப்பதாக கூறி பணம் வாங்கிக் கொண்டு தோஷம் கழிக்காமலேயே ஏமாற்றி வந்துள்ளதும் தெரியவந்தது. குறிப்பாக இளைஞர்களை அணுகி திருமண தோஷம் கழிப்பதாகக் கூறி கைவரிசை காட்டி வந்துள்ளார்.
இதனையடுத்து ஜோதிடர் விஜய் என்கிற முருகேசை லக்காபுரம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆய்வு .திருப்பூரில் இருந்து கோவை .உடுமலை.பழனி.மதுரை உட்பட அனை...
-
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பூர்...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட குடும்ப அட்டைகள் இந்த ஆண்டுடன் முடிவடைவதால் , புதிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டியிருக்கிறது . எனினும் த...
-
வடகொரியத் தலைவரைக் கொல்வதைக் கற்பனைக் கதையாகக் கொண்ட சர்ச்சைக்குரிய திரைப்படம் அமெரிக்காவில் சில திரையரங்...
0 comments:
Post a Comment