Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in
மதுரை விளக்குத்தூண் காவல் நிலையம் பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. மிகவும் பழுதடைந்த நிலையிலுள்ள இக்கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.
தாற்காலிகமாக காவல் ஆணையர் அலுவலகம் அருகிலுள்ள பழைய கட்டடத்தில் விளக்குத்தூண் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை மாலையில் மதுரையில் பலத்த மழை கொட்டியது. இதில், இக்காவல் நிலைய கட்டடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. அதிலிருந்து சில மரக்கட்டைகள் திடீரென பெயர்ந்து கீழே விழுந்தன. அப்போது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்திருந்தவர் தப்பினார்.