Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,

மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெறலாம். மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளியில் டிப்ளமோ செவிலியர் படிப்புக்கு 178 இடங்கள் உள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் 1500 வந்துள்ளன. பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவியர் ரூ.250-க்கான வரைவோலையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பெற்று, விண்ணப்பங்களைப் பெறலாம். தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டோர் சாதிச் சான்று நகல்களை அளித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெறலாம். வரும் 21-ம் தேதி (வியாழன்) வரை விண்ணப்பங்கள் பெறலாம் என கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன. மதுரை மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை முதல் நாளில் மட்டும் 170 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினர் 45 சதவிகிதம் மதிப்பெண்ணும், தாழ்த்தப்பட்டோர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் டிப்ளமோ செவிலியர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.