Thursday, August 28, 2014

On Thursday, August 28, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோடு: நல வாரிய மாவட்ட கண்காணிப்பு குழுவை, உடனடியாக கூட்ட வேண்டும், என்று, சி.ஐ.டி.யு., கேட்டு கொண்டுள்ளது. ஈரோடு மாவட்ட சி.ஐ.டி.யு., பொது செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:
அரசாணைக்கும், நடைமுறைக்கும் மாறாக, தன்னிச்சையாக விதிகளை உருவாக்கி, நல வாரியத்தை சீர்கேட்டுக்கு உள்ளாக்கி உள்ள தொழிலாளர் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நல வாரிய மாவட்ட கண்காணிப்பு குழுவை, உடனடியாக கூட்ட வேண்டும். தொழிலாளர்களிடம் பெற்ற மனுக்களில், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை திருத்தம் செய்து கொடுப்பதற்காக, உரியவர்களிடம் கொடுத்திட வேண்டும். அனைத்து வகை சலுகைகளுக்காகவும் விண்ணப்பித்துள்ள, விண்ணப்பதாரர்களுக்கு, கால தாமதம் இன்றி, சலுகை தொகை வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, வரும், இரண்டாம் தேதி தொழிலாளர் அலுவலர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதுபோல் வரும், 11ம் தேதி நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறோம். தவறும் பட்சத்தில் ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்கள் நடக்கும், என்றார். அதன் பின் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

0 comments: