Friday, August 08, 2014
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைகோ இன்று பகல் 12 மணியளவில் சென்னையில் இருந்து கடலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோவளம் அருகே சென்றபோது வைகோவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் லேசான மயக்கமும் ஏற்பட்டதால் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனைக்கு அவரது உதவியாளர் தகவல் தெரிவித்தார்.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேன் புறப்பட்டு வந்தது. வைகோ சென்ற கார் கோவளம் சுங்கச்சாவடியில் நின்றது. அங்கு வந்த ஆம்புலன்சில் வைகோவை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்தனர். வைகோவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் பிரதீப் நாயர், ராஜசேகர் ஆகியோர் கூறுகையில், ‘‘வைகோவின் உடலை பரிசோதித்ததில் குறைந்த ரத்த அழுத்தம் அவருக்கு இருந்தது. இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது'' என்று கூறியுள்ளனர்.
வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி தொண்டர்களிடம் பரவியது. ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடல் நலம் குறித்து கேட்டறிவதற்காக கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனை முன்பு குவிந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
