Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by farook press in ,    

திருப்பூர் மக்கள் நலம்  அறக்கட்டளை மற்றும் ரேவதி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச புற்று நோய் சிகிச்சை, அறுவை சிகிச்சை கண்காட்சி மற்றும் புற்று நோய் விழிப்புணர்வு முகாம் துவக்க விழா ரெயில் நிலையம் அருகில் உள்ள  டவுன்ஹாலில் நடந்தது. மக்கள் நலம் அறக்கட்டளை நிறுவன தலைவர் எம்.ஹாருன் தலைமை தாங்கினார்.ரேவதி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர். ஈஸ்வரமூர்த்தி வரவேற்று பேசினார். முகாமை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர் வி.ராதாகிருஷ்ணன், நகரமைப்பு குழுத்தலைவர் அன்பகம் திருப்பதி, வளர்மதி கூட்டுறவு சங்க துணைத்தலைவர் கருவம்பாளையம் எம்.மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன், வீரபாண்டி கூட்டுறவு வீடு கட்டும் சங்க தலைவர் மார்க்கெட் நா.சக்திவேல், கவுன்சிலர் ஏ.சண்முகம், ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

0 comments: