Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by Unknown in ,    
  மதுரை ஏ வி மேம்பாலம் இறக்கத்தில் சிம்மக்கல் நெல்பேட்டை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலை உள்ளது .முன்னாள் முதல்வர்  கலைஞர் கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்ட இந்த சிலை தற்போது பராமரிப்பில்லாமல் போஸ்டர் ஒட்டுகின்ற இடமாக மாறிவருகிறது .

                                         தமிழகம் என பெயர் சூட்டி மகிழ்ந்த தலைவர் ,சுயமரியாதை திருமணங்களை சட்ட பூர்வமாக்கிய பண்பாளர் ,மாநிலத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் ,தென்னகத்தின் பெர்னாட்ஷா என போற்றப்படகூடியவர் ,திராவிட இயக்கத்தை அரசியல் இயக்கமாக முன்னெடுத்து செல்வதில் தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவழித்தவரின் சிலை இன்று அலங்கோலமாக காட்சி அளிக்கிறது
            
                                  சிலையின் முன் பகுதியிலே சினிமா போஸ்டர்களும் ,அரசியல் கட்சியினரின் போஸ்டர்களும் மாறி மாறி ஒட்டப்படுகிறது .சிலையின் தலைப்பகுதிக்கு மேலே இருந்த மின் விளக்கு காணமல் போய் வெறும் வயர் மட்டும் தொங்கி கொண்டு இருக்கிறது 

                                       ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்ட அணையா விளக்காம் அண்ணாவின் சிலை இருளில் கிடக்கிறது .விழா என்றால் மட்டும் ஆளுயர மாலைகளை சுமந்து கொண்ட அண்ணனை காண வரும் தம்பிகள் மற்ற நேரங்களில் அண்ணாவை மறக்கலாமா ?

                                     மாவட்ட .மாநகராட்சி நிர்வாகமாவது முன்னாள் முதல் அமைச்சர் என்ற முறையிலாவது சிலையினை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .சிலை மீது போஸ்டர் ஒட்ட தடை விதிக்க வேண்டும் .வருகிற செப் 15 பிறந்த நாளிற்குல்லாவது இதனை செயலபடுத்த வேண்டும் ,

                                எதையும் தாங்கும் இதயம் இதையும் தாங்கிட தான் வேண்டும் என்ற நிலை மாற்றிட வேண்டும் ,அண்ணாவின் உடன் பிறப்புகளும் ,அண்ணாவை கொடியில் வைத்து இருக்கும் ஆளும் கட்சியினரும் தாமாக முன் வந்து இந்த பணியில் ஈடுபட வேண்டும் . 



0 comments: