Thursday, August 21, 2014

On Thursday, August 21, 2014 by Unknown in ,    


முல்லை பெரியாறு அணையில் முதல்வர் ஜெயலலிதா கடந்து வந்த வெற்றிப்பாதை

                                அதிமுக பொதுச்செயலாளரும்  தமிழக முதல்வருமான ஜெயலலிதா மதுரையில் கலந்து கொள்கிற பொதுக்கூட்டங்கள் எப்போதுமே தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது .எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது மதுரையில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது .இதனை தொடர்ந்து அதிமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு மதுரையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார கூட்டம் மாபெரும் வெற்றியை தேடி தந்தது .அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது விவசாய தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் முதல்வரை வரவேற்க தயாராகி வருகின்றனர் .

                                               தமிழகத்தின் 5 மாவட்ட விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினையை சட்ட போராட்டத்தின் மூலம் மீட்டெடுத்து முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடி உயர்த்திட உரிமை பெற்றதோடு அல்லாமல் இந்த மகிழ்ச்சியான தீர்ப்பினால் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கின்றார் 

                                          31.3.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு முன்பு தமிழக அரசின் சிறப்பான வாதங்களை முன்னெடுத்து சென்று 7.5.2014 அன்று தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பினை பெற்றதோடு 3.6.2014 அன்று டெல்லியில் இந்திய பிரதமரை சந்தித்து அளித்த கோரிக்கை  மனுவின் படி 142 அடி உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டு அடைப்பான்கள் இறக்கப்பட்டு மாபெரும் வெற்றியை தமிழக முதல்வர் ஜெயலலிதா பெற்று தந்துள்ளார் 

                            மதுரை ரிங்ரோடு மஸ்தான்பட்டியில் முதல்– அமைச்சர் ஜெயலிதாவுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் 5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளன. விழா மைதானம் அருகே ஹெலிபேடும் அமைக்கப்பட்டுள்ளது.
விழா மைதானத்தில் முல்லை பெரியாறு மற்றும் வைகை அணையின் தோற்றத்தை சித்தரிக்கும் செயற்கையான அணைத் தோற்றம் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள். மேலும் அலங்கார வளைவுகள், வரவேற்பு தோரணங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.பாராட்டு விழாவில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்வதற்காக இன்று  (வெள்ளிக் கிழமை) மதியம் 2 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை வருகிறார்.மதுரை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மேயர் ராஜன்செல்லப்பா மற்றும் போலீஸ் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.பின்னர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் விழா மைதானம் அருகே அமைக்கப்பட்டுளள் ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். அங்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சுந்தரராஜன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள். 5 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகளும் வரவேற்கிறார்கள்.இதையடுத்து மதியம் 3.30 மணி அளவில் விழா மேடையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதில் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பேசுகிறார்கள்.
இதையடுத்து முதல்– அமைச்சர் ஜெயலலிதா சிறப்புரையாற்றுகிறார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா பாராட்டு விழாவில் பங்கேற்க மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் திரளுகிறார்கள். இதனால் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆங்காங்கே வாகன நிறுத்துமிடங்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க சட்ட போராட்டம் நடத்தி தமிழக மக்களுக்கு நீதியை பெற்று தந்த முதல்– அமைச்சர் அம்மாவுக்கு 5 மாவட்ட விவசாயிகள் சார்பில் நன்றி பாராட்டும் விழா இன்று நடக்கிறது.இதில் 7 லட்சம் மக்கள் திரண்டு வந்து முதல்– அமைச்சர் அம்மாவுக்கு நன்றியை காணிக்கையாக்குகிறார்கள்.இந்த விழாவில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி ஜீவாதார பிரச்சினைக்கு தீர்வு கண்ட அம்மாவை மதுரை நகர மக்கள் அனைவரும் குடும்பம், குடும்பமாக திரண்டு வந்து வாழ்த்த வேண்டும்.
என  கூறியுள்ளார்.முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி மதுரை ரிங்ரோடு மைதானம் மின்னொலியில் பிரகாசிக்கிறது. மதுரை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

0 comments: