Friday, August 15, 2014

On Friday, August 15, 2014 by farook press in ,    
திருப்பூரில் நடைபெற்ற 68-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர்  ஜி.கோவிந்தராஜ் கொடி ஏற்றி வைத்து ரூ.2.55 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 68-வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதனத்தில் இன்று காலை நடைபெற்றது.சரியாக 9.00 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தேசிய கொடியியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல் துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படையினை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.பின்னர் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்ட தியாகிகளை கௌரவித்தார்.சமாதானத்தை குறிக்கும் வகையில் வண்ண, வண்ண பலூன்கள் மற்றும் புறாக்களை கலெக்டர், மாநகர காவல்துறை ஆணையாளர் ஆகியோர் பறக்க விட்டனர்.
மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகர காவல் துறை யை சேர்ந்த 51 பேர் உள்ளிட்ட 92 காவலர்களுக்கு பதக்கங்களும், சிறப்பாக பணியாற்றிய 70 அரசு அலுவலர்களுக்கு நற்சன்றிதல்களும் வழங்கப்பட்டன.பின்னர் வீட்டு மனை பட்டா, கல்வி உதவித்தொகை, திருமண உதவி தொகை மற்றும் பசுமை வீடு, இந்திர நினைவு குடியிருப்புகள் உள்ளிட்ட வைகளுக்கு ரூ.2 கோடியே,54 லட்சத்து,58 ஆயிரத்து,833 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 406 நபர்களுக்கு வழங்கினார்.
விழாவில் மாநகர காவல் ஆணையாளர் என்.எஸ்.சேஷாய், மாவட்ட கண்காணிப்பாளர் அமித்குமார் சிங், மாவட்ட அமர்வு நீதிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் பாரி, திட்ட அலுவலர் திரவியம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், ஆர்.டி.ஓ.பழனிகுமார், தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கி மாவட்ட கலெக்டர் கௌரவித்தார். 









 

0 comments: