Tuesday, August 19, 2014

On Tuesday, August 19, 2014 by Unknown in ,    



திருப்பூரில் தங்கியிருக்கும் நைஜீரியர்களால் எபோலா வைரஸ் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் ஆம் ஆத்மி கட்சியினர் அளித்த கோரிக்கை மனு:
திருப்பூர் நொய்யல் ஆற்றில் பிளாஸ்டிக் மற்றும் இதரக் கழிவுகளைக்கொட்டி ஆற்றை மாசுப்படுத்தி வருகின்றனர். இதனால், மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து சேதம் உண்டாகிறது.
சங்கிலிப்பள்ளம், நொய்யலாற்றில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் கிடப்பதால், உடனடியாக தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் பாலித்தீன் பைகள் பயன்பாட்டிற்கும், விற்பனைக்கும் நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்.
திருப்பூரில் நைஜீரியர்கள் சட்டத்திற்கு புறம்பாக தங்குவதை கட்டுப்படுத்தவும், அவர்கள் மூலமாக எபோலா வைரஸ் பாதிக்காமல் இருக்கவும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

0 comments: