Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,

தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தில் சுமார் 68 ஆயிரம் சத்துணவு மையங்களும், 35 ஆயிரம் அங்கன்வாடி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சுமார் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்று கிறார்கள். இந்த இரண்டரை லட்சம் பேரில், சுமார் 40 ஆயிரம் காலி பணி இடங்கள் உள்ளன. கடந்த மூன்றாண்டுகளாகவே இந்தக் காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதன் காரணமாக ஒரு சத்துணவு அமைப்பாளர் ஐந்துக்கு மேற்பட்ட மையங்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியத் திற்கு ஆளாகிறார். எனவே உடனடியாக காலிப் பணி இடங்களை நிரப்ப வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்கள்.
மேலும் சத்துணவு திட்டத்துக்கு தனித்துறை, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், இந்த மையங்களை தனியாருக்கு சில இடங்களில் தாரை வார்ப்பதைத் தவிர்க்க வேண்டும், பணிக் காலத்தில் மறைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கிட வேண்டும், சட்டப்பூர்வமான குடும்ப ஓய்வூதி யம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் முன் வைத்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் சத்துணவுப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த காய்கறிகள் மற்றும் விறகு செலவுகளுக்காக 18.07.2007 அன்று 35 காசை 44 காசாக கழக அரசு உயர்த்தி வழங்கியது. தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த உணவீட்டுச் செலவினம் 44 காசை 70 காசாகவும், நடுநிலைப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த 44 காசை 80 காசாகவும், 9-10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 44 காசை 80 காசாகவும், குழந்தை மையங்களில் பயன்பெறும் 2 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த 44 காசை 56 காசாகவும் மேலும் உயர்த்தி கழக அரசு வழங்கியது.

தொடக்கப்பள்ளி மாணவ / மாணவியருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்பட்டு வரும் 1 கிராம் சமையல் எண்ணெய் 3 கிராமாகவும், நடுநிலைப்பள்ளி மாணவ / மாணவியருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்பட்டு வரும் 100 கிராம் அரிசியினை 150 கிராமாகவும், 1 கிராம் சமையல் எண்ணெய் 3 கிராமாகவும் மற்றும் காய்கறி 50 கிராமிலிருந்து 60 கிராமாகவும் உயர்த்தி கழக ஆட்சியில் வழங்கப்பட்டது. மேலும், 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவ / மாணவியருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்பட்டு வரும் 120 கிராம் அரிசி 150 கிராமாகவும், 1 கிராம் சமையல் எண்ணெய் 3 கிராமாகவும் மற்றும் காய்கறி 50 கிராமிலிருந்து 60 கிராமாகவும் 24.9.2010 அன்று ஆணையிடப்பட்டு உயர்த்தி கழக ஆட்சியில் வழங்கப்பட்டது.

பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரிந்து பணியிடையே காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 57 பேருக்குச் சத்துணவு அமைப்பாளர்களாகவும், 8 பேருக்கு சமையலராகவும், 11 பேருக்குச் சமையல் உதவியாளர்களாகவும் ஆக மொத்தம் 76 பேருக்குக் கருணை அடிப்படையில் கழக ஆட்சியில் பணி நியமனம் வழங்கப்பட்டது. பணியிலிருக்கும் பொழுது இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணியிடம் வழங்க 25.10.2007 முதல் வகை செய்யப்பட்டு உள்ளது. அதனடிப்படையில் 29 பேருக்கு அங்கன்வாடி பணியாளர்களாகவும் மற்றும் 13 பேருக்கு அங்கன்வாடி உதவியாளர்களாகவும் கருணை அடிப் படையில் பணியிடம் கழக ஆட்சியில் வழங்கப்பட்டது.
27.1.1989 முதல் 30.1.1991 வரை அமைந்த கழக அரசினால் பணியாளர்களை அந்தந்த ஊராட்சியின் நிரந்தரப் பகுதி நேரப் பணியாளர்கள் என வகைப்படுத்தப்பட்டனர்.
சத்துணவுப் பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மூன்று மாதங்களுக்கு ஊதியத்துடன் வழங்க கழக ஆட்சியில் ஆணையிடப்பட்டது.

13.5.1996 முதல் 13.5.2001 வரையிலான கழக அரசு காலத்தில் சத்துணவுப் பணியாளர்களுக்குக் குடும்ப நல நிதித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு; பணியிலிருக்கும் போது காலமான சத்துணவுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று ரூ.1.5 இலட்சம் குடும்ப நல நிதி கழக ஆட்சியில் வழங்கப்பட்டது.
சத்துணவு சமையலர் / உதவியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 55 லிருந்து 58 ஆக உயர்த்தியது. சத்துணவு / அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு சேமநல நிதித் திட்டம் தொடங்கப்பட்டு; அரசின் பங்குத் தொகை
5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் ஒருமுறைகூட ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியிலேதான் அவர்களுக்கு மூன்று முறை ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்பட்டது. ரூபாய் 200-5-250-10-400 என அவர்கள் பெற்று வந்த ஊதியம், 1998ஆம் ஆண்டு முதல்முறையாக ரூபாய் 600-10-700-20-1100 என உயர்த்தப்பட்ட தோடு; அப்படி உயர்த்தப்பட்ட ஊதிய விகிதமும் 1.1.1996 முதல் முன்தேதியிட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வழங்கப்பட்டது. அவர்களது ஊதிய விகிதம் இரண்டாம் முறையாக 1.9.2006 முதல் ரூபாய் 1300-20-1500-25-2000 என உயர்த்தி வழங்கப் பட்டது. பிறகு மீண்டும் அவர்களது ஊதிய விகிதம் மூன்றாம் முறையாக ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ரூபாய் 2500-5000 எனவும்; ரூபாய் 500 தர ஊதியம் எனவும் உயர்த்தி 1.9.2006 முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட்டது.

கழக ஆட்சியிலேதான், சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களில் பத்தாண்டுப் பணி முடித்தவர்களுக்கு, ஒரு ஊதிய உயர்வும், 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு மற்றொரு ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க ஆட்சியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த சத்துணவு சமையலர்கள், உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் ஆகிய அனைவருமே கழக ஆட்சியிலேதான் சிறப்பு ஊதிய விகிதம் பெற்று வருகின்றனர்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர் களுக்கு அ.தி.மு.க ஆட்சியில் அகவிலைப்படி தவிர ஏனைய படிகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியிலேதான், அவர்களுக்கு முதல்முறையாக 1.6.2009 முதல் மாதந்தோறும் வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி ஆகியவைகளும், 100 ரூபாய் மருத்துவப் படியும், 2000 ரூபாய் பண்டிகைக் கால முன்பணமும் வழங்கப்பட்டு வருகின்றன.
சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர் களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் மாதாந்திர ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியிலே தான் இதுவரை ஓய்வுப் பெற்ற சத்துணவு அமைப் பாளர்களுக்கும், அங்கன்வாடிப் பணியாளர்களில் சமையலர்களுக்கும், முதல் நிலை அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் - சமையல் உதவியாளர் களுக்கும், இரண்டாம் நிலை அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் முறையே மாதந்தோறும் ரூபாய் 700, ரூபாய் 600, ரூபாய் 500 என்று முதல் முறையாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் அவர்களுக்குப் பதவி உயர்வு எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியிலே தான், சத்துணவு உதவியாளர்களுக்கு சமையலர் களாகவும், சமையல் மற்றும் உதவியாளர்களுக்கு சத்துணவு அமைப்பாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. 1020 சமையலர்களும், உதவியாளர்களும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

கழக ஆட்சியிலேதான், புதிய சலுகைகள் மற்றும் புதிய திட்டங்கள் என்ற முறையில் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் 1.4.2010 முதல் செயல்படுத்தப் படுகிறது. சிறப்பு சேமநல நிதித் திட்டம் பத்தாயிரம் ரூபாயாகவும், குடும்ப நலத் திட்டம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகவும் வழங்கப்படுவதுடன்; தமிழ்நாடு அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உயர்ந்தபட்சமாக இரண்டு இலட்சம் ரூபாய் வரை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஆசிரியர் பட்டயப் படிப்பு பயிற்சி (Diploma in Teacher Education) முடித்த சத்துணவு மற்றும் குழந்தை மைய பணியாளர்கள் இடைநிலை ஆசிரியர் களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பி.எட். படித்து முடித்த அங்கன்வாடி பணியாளர் களுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்க கழக அரசு ஆணை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தும்பொருட்டு தகுதிவாய்ந்த 59 அங்கன்வாடி பணியாளர்களுக்கும் 405 சத்துணவுப் பணியாளர்களுக்கும் பெயர் பட்டியல் 4.10.2010 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்பட்டு நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

2001 முதல் 2006 வரை 5 ஆண்டுகள் நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சியில் 7655 பணி இடங்களில் மட்டுமே புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் கழக ஆட்சியில் சத்துணவு மற்றும் குழந்தை மையங்களில் 2006 முதல் 6408 அங்கன்வாடிப் பணியாளர்கள்; 1991 குறு அங்கன்வாடிப் பணியாளர்கள்; 13167 உதவி யாளர்கள் என மொத்தம் 21566 பேர் உட்பட மொத்தம் 56 ஆயிரத்து 833 பணியிடங்கள் நிரப்பப்பட்டு மகத்தான சாதனை கழக ஆட்சியில் நிகழ்த்தப்பட் டுள்ளது. சத்துணவு அமைப்பாளர்களும், அங்கன்வாடிப் பணியாளர்களும் அ.தி.மு.க. ஆட்சியில் குறைந்தபட்ச ஊதியமாக மாதந்தோறும் 1488 ரூபாயும்; உயர்ந்தபட்ச ஊதியமாக மாதந்தோறும் 2158 ரூபாயும் பெற்று வந்தனர். ஆனால் கழக ஆட்சியிலே அவர்கள் குறைந்த பட்ச ஊதியமாக மாதந்தோறும் 4911 ரூபாயும்; உயர்ந்த பட்ச ஊதியமாக மாதந்தோறும் 5471 ரூபாயும் பெற்றனர்.
சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் ஆகியோர் தமிழகத்தில் தற்போது பெற்றுவரும் ஊதியத்தின் அளவுதான்; இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிகம் என்பது மட்டுமன்றி; அவர்களுக்கு தமிழகத்தில் வழங்கப்படும் சலுகைகளும், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களும் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கென சிறப்பாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட ஊழியர்கள் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கழக ஆட்சியில் சத்துணவுப் பணியாளர்களுக்கு செய்த நன்மைகளுக்காக 21-11-2009 அன்று வள்ளுவர் கோட்டத்தில் மிகப் பெரிய"நன்றி பாராட்டும்" கூட்டத்தை என்னை அழைத்து நடத்தினார்கள். அந்தக் கூட்டத்திலே மட்டும் பதினைந்து புதிய அறிவிப்புகளை இந்தப் பணியாளர்களுக்காக நான் அறிவித்தேன்.

கழக ஆட்சியில் இத்தனை சலுகைகளை அளித்த போதிலும், அவர்கள் 30-8-2010 அன்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தபோது, இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா 31-8-2010 அன்று விடுத்த அறிக்கையில், "சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அடக்குமுறையை ஏவி விட்டிருக்கும் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதல மைச்சர் கருணாநிதிக்கு எனது (ஜெயலலிதாவின்) கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட பணி நீக்கம் மற்றும் இதர ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எம்.ஜி.ஆர். ஆட்சி விரைவில் மலரும், சத்துணவு ஊழியர்களின் குறைகள் தீரும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்"" என்றெல்லாம் தெரிவித் திருந்தாரே, அவர் கூறியது போல அவரது ஆட்சி வந்ததே, சத்துணவு ஊழியர்களின் குறைகள் தீர்ந்ததா? ஆனால் கழக ஆட்சியில் அந்தப் போராட் டமும் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்த்து வைக்கப் பட்டது.
ஏன், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே "சத்துணவுப் பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பாக பிரச்சினைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்" என்று அறிவித்தார்களே, அதையாவது காப்பாற்றினார்களா?தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் இணை கன்வீனர் மு. வரதராசன் விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த ஆட்சியில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கை நியாயமானது, போராடும் நிர்வாகிகளை அரசு அழைத்துப் பேச வேண்டும், தேர்தல் வாக்குறுதியில் எங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென்று ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் 3 ஆண்டாகியும் நிறைவேற்றவில்லை, போராடும் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச வில்லை, மாறாக போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று சமூக நல இயக்குனர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்" என்றெல்லாம் கூறி யிருக்கிறாரே, அதற்கு அரசின் விளக்கம் என்ன?
தி.மு. கழக ஆட்சியின் போது எங்களுக்கு அறிவுரை கூறிய ஜெயலலிதா தற்போது அதிகாரி களின் மூலமாக போராட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், முன் அறிவிப்பின்றி தலைமை யிடத்தை விட்டுச் செல்லும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்களாம். சத்துணவு ஊழியர்களின் இந்தக் கோரிக்கைகள் பற்றி 15-7-2014 அன்று இந்தத் துறையின் அமைச்சர் தனது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போதும், 24-7-2014 அன்று முதலமைச்சர் 110வது விதியின் கீழ் படித்த இந்தத் துறை குறித்த அறிவிப்பு களிலும், இந்தப் பணியாளர்களைப் பற்றிய அறிவிப்பு களே இல்லை என்ற போதிலும், அந்த அலுவலர்கள் போராட்டத்தை அறிவித்திருக்கும் நிலையிலாவது அந்தச் சங்கத்தினரை அழைத்துப் பேசி, ஒரு சுமூகமான முடிவு கண்டு, அவர்களின் கோரிக்கை களின் மீதான அறிவிப்புகளை அரசு செய்திட முன்வர வேண்டும்.
Photo: சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பிரச்சினை -
இந்த அரசின் அணுகுமுறை என்ன?