Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    

அறச்சலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் சாவடிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 44). தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் தங்கி உள்ளார். அதனால் சாவடிக்காடு பகுதியில் உள்ள வீட்டை அதே பகுதியில் வசிக்கும் ஈஸ்வரனின் மாமனார் அண்ணாமலை கவனித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை ஈஸ்வரனின் வீட்டுக்கு அண்ணாமலை சென்றார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தையும், வீட்டில் இருந்து எல்.ஈ.டி. டி.வி.யையும் காணாதது கண்டு திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணத்தையும், டி.வியையும் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலை உடனடியாக அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்.

0 comments: