Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by Unknown in ,    
Turn off for: Tamil




நாளையுடன் 13 வருடங்கள் பூர்த்தியாகிறது.
செப்டம்பர் 11, 2001 நியூயார்க் என்றாலே அமெரிக்க மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் குறிக்கும்.  அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவை பழிவாங்க 4 விமானங்களை கடத்தினர். அதில் 2 விமானங்கள் நியூயார்க்கின் இரட்டை கோபுர 100 மாடி கட்டிடத்தில் மோதி தகர்த்தன. ஒரு விமானம் பென்டகன் மீதும் மற்றொரு விமானம் தரையிலும் விழுந்தது.
4 விமானங்களில் இருந்த அனைவரும் பலியானார்கள் அவர்களில் 19 பயங்கர வாதிகள் நியூயார்க் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் இரு கோபுரங்களும் பற்றி எரிந்தன. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது. இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 2,973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர்.
2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதியன்று, பயங்கரவாத தாக்குதலுக்காக 19 தீவிரவாதிகளால், 4 வர்த்தக விமானங்கள் கைப்பற்றப்பட்டன. 757ம் எண் கொண்ட போயிங் விமானத்தை இருவரும், 767ம் எண் கொண்ட மற்றொரு போயிங் விமானத்தை இருவரும் கைப்பற்றினர். மேலும், லாஸ் ஏஞ்சல்சிலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தை மூவரும், சான் பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்பட்ட ஒரு விமானத்தை ஒருவரும் கைப்பற்றினர்.
பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்துவதற்காகவே, அதிக எரிபொருளை சேமிக்கும் திறன் கொண்ட நீண்ட விமானங்களை கடத்தலுக்காக தெரிவு செய்தனர்.
7 விமானப் பணியாளர்கள் மற்றும் நான்கு கடத்தல்காரர்களைத் தவிர 33 பயணிகளுடன், காலை 8:42 மணிக்கு நீவர்க் விமான நிலையத்திலிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு கிளம்பிய விமானத்தைக் கொண்டு, காலை 10:03 மணிக்கு, பென்னி சிலாவனியா மாகாணத் திலுள்ள ஷான்க்ஸின் நிலப்பகுதியின் மீது மோத வைத்தனர்.
உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலுக்கு பிறகு நடந்த தாக்குதல்களை ஊடகங்கள், தொடர்ந்து தங்களது நேரடி ஒளிபரப்பு மூலம் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தனர்.
 இரட்டை கோபுரம் தாக்குதலில் பலியானோருக்கு நாளை மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது

0 comments: