Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
பெரியாரின் 136-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரசு சார்பில் விழா

பெரியாரின் 136-வது பிறந்தநாளை நேற்று அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சிறப்பாக கொண்டாடினார்கள். கோவையில் அரசு சார்பில் நடந்த விழாவில், எம்.பி.க்கள் ஏ.பி.நாகராஜன், ஏ.கே.செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் சின்னச்சாமி, தாமோதரன், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, தா.மலரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவை முன்னிட்டு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அருகே பெரியாரின் நினைவு தூண் முன்பு பெரியாரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. தமிழக நகராட்சி மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி, மண்டல தலைவர்கள் சாவித்திரி பார்த்திபன், ஆதிநாராயணன், ஜெயராமன் மற்றும் சி.டி.சி. ஜப்பார், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொன் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.-ம.தி.மு.க.

கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கா.ரா.சுப்பையன், கார்த்திக்செல்வராஜ், மகுடபதி, நாச்சிமுத்து உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் ம.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் பெரியாரின் உருவப்படத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் என்.கே.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அ.சேதுபதி, மு.தியாகராஜன், சூரிநந்தகோபால், கணபதி செல்வராஜ், ஆர்.சற்குணம், மு.ராமநாதன், வெள்ளியங்கிரி, ஷாஜகான், யூசுப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கோபால், சாஜித், ஆறுச்சாமி, ராமசாமி, இளங்கோ, பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு

கோவை வெங்கிட்டாபுரத்தில் குத்தூசி குருசாமி படிப்பகத்தில் பெரியார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பெரியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து வக்கீல் சி.பி.சண்முகசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கதிரவன், ராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலா, அன்பு, ஓவியா உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர். உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு பெரியாரின் கொள்கைகள் இடம்பெற்ற நோட்டீசுகளும் வினியோகம் செய்யப்பட்டன.

அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கோவையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ஸ்டீபன் ராஜ் மாலை அணிவித்தார். இந்தநிகழ்ச்சியில் இளங்கோ, சி.டி.சி.சுப்பிரமணி, பி.எஸ்.ஸ்டீபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments: