Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
நாகர்கோவில் கீழபெருவிளையை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருடைய மகள் தேவிகலா (வயது 17) பிளஸ்–2 படித்துள்ளார். இவர் கடந்த 9–ந்தேதி முப்பந்தல் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் சுப்பிரமணியம் புகார் செய்தார். இந்தநிலையில் மறுநாள் போலீஸ் நிலையத்தில் தேவிகலா ஆஜரானார். அப்போது தோவாளை கமல் நகரை சேர்ந்த சரவணன் (31) என்பவரை காதலிக்கிறேன். வீட்டில் கண்டித்ததால், உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வந்தேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து தேவிகலாவை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று தோவாளையில் திருமண வயதை எட்டாத தேவிகலா–சரவணன் ஆகியோருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராஜபதிக்கு தகவல் வந்தது. உடனே அவர் உத்தரவின் பேரில் அலுவலர் அஜிதா, தோவாளை கிராம நிர்வாக அதிகாரி கலைவாணி, ஆரல்வாய்மொழி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அந்த வீட்டில் திருமண ஏற்பாடு நடந்தது தெரிய வந்தது. தேவிகலாவுக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து தேவிகலா மற்றும் சரவணன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். தேவிகலாவுக்கு 18 வயது முடிந்த பிறகு திருமணம் செய்யலாம். அதற்கு முன்பு திருமணம் செய்யக்கூடாது அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

0 comments: