Monday, September 08, 2014

On Monday, September 08, 2014 by Unknown in ,    
திருப்பரங்குன்றம் பாலாஜி நகரைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவருக்கும் அவரது வீட்டின் அருகே பெயிண்டிங் வேலைக்கு வந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 4–ந் தேதி மதியம் திடீரென இளம்பெண் மாயமாகி விட்டார். இதுகுறித்து அவரது தாய் திருநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் மாயமான பெண் நிலைகுலைந்த நிலையில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணை மீட்டு விசாரணை நடத்திய போது, அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பெண்ணை சிகிச்சைக்கு அனுப்பிய போலீசார், மரபணு சோதனைக்கும் உட்படுத்தினர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது, பெயிண்டிங் பணிக்கு வந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சென்றதாகவும் அவர் திருமண ஆசை காட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவரது நண்பர் குமார் என்பவரும் அங்கு வந்து, தன்னை எதிர்ப்பை மீறி கற்பழித்து விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தீவிர விசாரணை நடத்தினார். இதில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது, தென்பரங்குன்றம் பகுதியைச்சேர்ந்த விக்னேஷ் (வயது 30), குமார் (28) என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

0 comments: