Monday, September 08, 2014

On Monday, September 08, 2014 by Unknown in ,    
திருமங்கலத்தில் 446 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: முத்துராமலிங்கம் வழங்கினார்
திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு 446 விலையில்லா மிதிவண்டிகளை திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ– மாணவிகளுக்கும், விலையில்லா மிதிவண்டி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 3–ம் கட்டமாக திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு 446 விலையில்லா மிதிவண்டிகளை முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு மாணவ– மாணவிகளுக்கு வழங்கும் காலனி முதல் லேப்–டாப் வரை 14 வகையான திட்டங்கள் குறித்து அவர் பேசினார். இதில் நகர செயலாளர் விஜயன், நகரசபை துணைத்தலைவர் சதீஷ் சண்முகம், அவைத் தலைவர் ஜஹாங்கீர், வக்கீல் துரைப்பாண்டி, பாலமுருகன், ரவி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

0 comments: