Monday, September 08, 2014

On Monday, September 08, 2014 by Unknown in ,    
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே பாறைப்பட்டியை சேர்ந்தவர் ராசு (வயது–50) கட்டிடத் தொழிலாளி. இவருடைய மனைவி பெயர் சின்னழகி (42). இவர்களுக்கு 2 மகன்களும், 1 மகளும் இருக்கிறார்கள். பிள்ளைகள் 3 பேரும் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் தனியாக வாழ்ந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலையில் வழக்கம்போல் மனைவியிடம் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராசு வீட்டிலிருந்த சின்னழகியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஒடிவிட்டார் என தெரிகிறது.
தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு காந்த சொருபன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் பாலமேடு போலீசாருடன் சென்று பார்வையிட்டு விசாரனை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். தலைமறைவாக உள்ள ராசுவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

0 comments: