Monday, September 08, 2014

On Monday, September 08, 2014 by Unknown in ,    

மதுரை புத்தகத் திருவிழாவில் ரூ. 3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி இருப்பதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (பபாசி) சார்பில், மதுரையில் 9ஆவது புத்தகத் திருவிழா, கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நிறைவு நாள் என்பதால், புத்தகக் கண்காட்சிக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.
இதில், ரூ. 3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியிருப்பதாக, பபாசியின் தலைவர் மெ. மீனாட்சி சோமசுந்தரம், செயலர் கே.எஸ். புகழேந்தி ஆகியோர் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூட்டாகக் தெரிவித்தது: புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில், மதுரை புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மதுரை மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து புத்தகங்களைப் பார்வையிட்டு, வாங்கிச் சென்றனர். 150 பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வந்து பார்வையிட்டனர்.
அவர்களில் 10 சதவீதம் பேர் புத்தகங்களை வாங்கினர். புத்தகக் காட்சியை மொத்தம் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு வகையான புத்தகங்களை வாங்கிச் சென்ற வகையில், ரூ. 3 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
கடந்த ஆண்டு ரூ. 2 கோடிக்கு புத்தகம் விற்பனையாகியிருந்தது. வாசிப்போர் எண்ணிக்கை மேலும் உயர்ந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்கு உதவியாக இருந்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்துக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

0 comments: