Monday, September 08, 2014

On Monday, September 08, 2014 by Unknown in ,    

சட்டவிரோதமாகத் திருடி, தனியார் நிலங்களில் பதுக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை ஏலத்தில் விட அனுமதி கோரி, தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
2013 மே மாதம், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்திருந்த இம் மனுவில், பி. பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் மற்றும் சகாதேவன் ஆகியோர், தனியார் நிலங்களில் முறைகேடாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்கி ஏலம் விட அனுமதி கோரியிருந்தார்.
இம்மனு மாஜிஸ்திரேட் கே.வி. மகேந்திரபூபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

0 comments: