Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
கோவை கணபதி மோர் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 37). இவர் தனியார் நிறுவன மேலாளர். இவர் அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். வெங்கடாசலத்தின் பக் கத்து அறையில் தங்கியிருந்த 3 பேர் நேற்று முன்தினம் டி.வி.யில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தனர். எனவே சத்தத்தின் அளவை குறைத்து வைக்குமாறு வெங்கடாசலம் அவர்களிடம் கூறி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் பீர் பாட்டிலால் வெங்கடாசலத்தை குத்தியுள்ளனர். படுகாயமடைந்த வெங்கடாசலத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி வழக்கு பதிவு செய்து கணபதியை சேர்ந்த ராஜேஷ்பாபு (23), வேல்ராஜ் (24), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (24) ஆகிய 3 பேரை கைது செய்தார்.

0 comments: