Friday, September 12, 2014

On Friday, September 12, 2014 by Unknown in ,    

 





உடுமலை அருகே பிஏபி வாய்க்கால் ஷட்டரில் இருந்து 3 வயது குழந்தையின் சடலம் வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள போடிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யோகேந்திரா (3). புதன்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த யோகேந்திரா, திடீரென காணாமல் போனதையடுத்து, அவரின் பெற்றோர்கள் அந்தப் பகுதி முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் இது குறித்து அவரது தந்தை முருகேசன் உடுமலை போலீஸில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த நிலையில், தாந்தோணி கிராமம் அருகில் உள்ள சின்னப்புத்தூர் பிஏபி வாய்க்கால் ஷட்டரில் ஒரு குழந்தையின் சடலம் வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஷட்டரில் மீட்கப்பட்ட குழந்தை யோகேந்திரா என்பது தெரிய வந்தது. யோகேந்திரா, விளையாடிக் கொண்டிருக்கும் போது, தனது வீட்டின் அருகே உள்ள பிஏபி வாய்க்காலில் தவறி விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
யோகேந்திராவின் சடலம் உடுமலை அரசு மருத்துமனைக்கு கொண்டு வரப்பட்டது. உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: