Friday, September 12, 2014

On Friday, September 12, 2014 by Unknown in ,    

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் எம்.அக்பர் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் சந்திரகாந்தி வரவேற்றார். இதையொட்டி, தனியார் நிறுவனத்தின் சார்பில், தீ பரவும் முறைகள் மற்றும் அதை தடுப்பதற்கான முறைகள் பற்றி விளக்கி கூறப்பட்டது.
மேலும், கூடைப்பந்து போட்டி, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, முக்கோணம் கிராமத்தில் வளர்ந்திருந்த பார்த்தீனியம் செடிகள் அகற்றப்பட்டன. என்எஸ்எஸ் அலுவலர் செ.சரவணன் நன்றி கூறினார்.

0 comments: