Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
அ.தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு கடந்த 27–ந்தேதி பெங்களூர் கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்ததன் எதிரொலியாக தாராபுரத்தில் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்தியது தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் மோதிக்கொண்டனர்.
அப்போது கார் மற்றும் சில மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க.வை சேர்ந்த சிவசங்கர், மகாமுனி, பெருமாள்சாமி ஆகிய 3 பேரை நேற்று தாராபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

0 comments: