Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சியில்  கடந்த 3 ஆண்டில்  ரூ.400 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது என மேயர் அ.விசாலாட்சி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி 45வது வார்டு அண்ணா தி.மு.க.கவுன்சிலர் மருதமலை சம்பத் மரணம் அடைந்ததை யொட்டி காலியாக உள்ள அந்த வார்டுக்கு வருகின்ற 18-ந் தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது.அந்த வார்டில் அண்ணா தி.மு.க.சார்பில் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து மாநகர மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாராபுரம் ரோட்டில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை 
நடத்தி பிரச்சாரத்தை துவக்கி வைத்து திறந்த வேனில் சென்றும், குடிசை பகுதிகளுக்கு நடந்து சென்றும் வாக்காளர்களிடம் இரட்டை இல்லை சின்னத்திற்கு வாகு சேகரித்தார்.
இன்று காலை 6 மணிக்கு மங்கலம் ரோடு, டைமண்ட் தியேட்டர் அருகில் உள்ள பட்டத்தரசி மாரியம்மன் கோவிலில் மகளிர் அணி மாநில துணைச்செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி தலைமையில் சிறப்பு பூஜை செய்து ஜம்மனை பள்ளம், புதுமார்க்கெட் வீதி,காமசியம்மன் கோவில் வீதி, ஜம்மனை வீதி, எம்.ஜி.புதூர் 3-வது வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் எம்.கண்ணப்பனுடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவரகளை பொதுமக்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.அப்போது மேயர் விசாலாட்சி அவர்கள் மத்தியில் பேசியதாவது:-
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டில் திருப்பூர் மாநகராட்சியை 60 வார்டுகளாக உருவாக்கி முழுமையான மாநகராட்சியாக செயல்படும் வகையில் எங்களை எல்லாம் மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு தலைவர்கள் என பதவிகளை அளித்து ரூ.350 கோடியை சிறப்பு நிதியாக அளித்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் உருவாகியுள்ளார். மேலும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மேலும் ரூ.45 கோடியை அளித்துள்ளார். மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சமமாக நிதிகளை ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.45வது வார்டினை பொருத்தமட்டில் ரூ.3 கோடிக்கும் மேல் பணிகள் இந்த 3 ஆண்டில் நடைபெற்றுள்ளது. இது தவிர பழைய பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் அமைகப்பட்டுள்ளது.தார் தளங்கள் அகற்றப்பட்டு சிமெண்ட் தளம் அமைகப்பட்டுள்ளது.பயணிகள் இருக்கைகள் புதியதாக அமைகப்பட்டுள்ளது.பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி எண்ணற்ற பணிகள் நடைபெற்றுள்ளது.
மேலும் இந்த வார்டுக்கு வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளன.எனவே கடந்த சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற, நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆதரவு அளித்தது போல் உங்கள் வார்டில் உங்கள் வீட்டு பிள்ளையாக போட்டியிடும் கண்ணப்பன் அவர்களுக்கு  இரட்டை இலலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். 
இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி பேசினார்.
வாக்கு சேகரிபபின் போது மாவட்ட நகர நிர்வாகிகள் கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்தி, மார்க்கெட் சக்திவேல், தம்பி மனோகரன், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிகுமார், எஸ்பி.என்.பழனிச்சாமி, சி.எஸ்.கண்ணபிரான், பி.கே.எஸ்.சடையப்பன், கண்ணன், சாகுல்ஹமீது, விவேகானந்தன், தாமோதிரன்,கேபி.ஜி.மகேஷ்ராம்,சந்திரன்,கவுன்சிலர்கள் சண்முகம், கேபிள் சிவா, வசந்தாமணி, பேபி தர்மலிங்கம்,உள்ளிட்டவரக்ளும், கேபிள் பாலு, குணசேகரன், நல்லூர் லோகநாதன், விஸ்வநாதன்,எஸ்,ஆர்,நகர் ரவி, ரத்தினகுமார், ராஜ்குமார், மயில்ராஜ், பி.லோகநாதன், ஆண்டவர் பழனிச்சாமி, பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி,புலவர் சக்திவேல் மற்றும் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜசேகர்,பொன்னுசாமி, ராஜேந்திரன், பழனியப்பன், குணசேகரன், ரவிகுமார், சரவணன், முருகன் ஆகியோர்களும், கோமதி, சுந்தரம்பாள், சரஸ்வதி, முத்துலட்சுமி உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகளும்,டி.ஏ.பாலகிருஷ்ணன், தீக்கனல் விஜயகுமார் உள்ளிட்ட தலைமை கழக பேச்சாளர்களும் பார்வர்டு பிளாக் என்.ராஜசேகர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.   



0 comments: