Friday, September 12, 2014

On Friday, September 12, 2014 by Unknown in ,    



திருப்பூர், :திருப்பூரில் இரண்டு மினி பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் டிரை வர்கள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று முன்தினம் மாலை மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதேபோல், மங்கலத்திலிருந்து திருப்பூர் நோக்கி மற்றொரு மினி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு மினி பஸ்களிலும் பள்ளி மாணவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது திருப்பூர் சின்னியக்கவுண் டன்புது£ர் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக இரண்டு மினி பஸ்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில், டிரைவர்கள் உள்பட 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் மினி பஸ் டிரைவர்களான தாராபுரத்தை சேர்ந்த லோகேஷ்வரன் (23), உடுமலையை சேர்ந்த சக்திவேல் (24) ஆகியோரை திருப்பூர் அரசு மருத்துவமனையிலும், காயமடைந்த பயணிகளை ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

0 comments: