Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
ஆரல்வாய்மொழி அருகே பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக டெம்போ டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூ.5 லட்சம்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடத்தை அடுத்த குருக்கள் மடத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் (வயது 43).

அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (32), டெம்போ டிரைவர். இவர் குடும்ப செலவுக்காக ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலினிடம் 14–10–11 முதல் 5 தவணைகளாக ரூ.5 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

இந்த நிலையில் 12–12–13 அன்று ஆறுமுகம் வீட்டுக்கு கணவருடன் ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் சென்று பணத்தை திருப்பி கேட்ட போது, அவர் கன்னத்தில் ஆறுமுகம் அடித்து, பணம் கேட்டு வந்தால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் புகார் செய்தார். அதில், ‘‘ஆறுமுகம் ரூ.5 லட்சம் வாங்கிக்கொண்டு திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார்’’ என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் டெம்போ டிரைவர் ஆறுமுகம் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜெஸ்லின் ஜெப ஏஞ்சலின் தன் தாயாருடன் ஆறுமுகம் வீட்டு முன் 6 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

0 comments: