Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
திருவட்டாரில் வாலிபர், ஆட்டை கடித்து குதறிய வெறிநாய் பஸ் மோதி செத்தது.

இதுகுறித்த விவரம் வருமாறு:–

வெறிநாய்

திருவட்டார் பகுதியில்    தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  திருவட்டார் பாலம் அருகே ஓட்டல் இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் தெருநாய்களின் கூட்டம் அதிகமாக காணப் படுகிறது. இந்த நாய்கள் அவ்வப்போது, சாலையில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன.

இந்தநிலையில், நேற்று காலை திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பகுதியில் வெறிநாய் ஒன்று சுற்றி, சுற்றி வந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற, செம்பறாவிளை பகுதியை சேர்ந்த 33 வயது வாலிபரை வெறிநாய் கடித்தது. பின்னர், அந்த நாய் திருவட்டார் பஸ் நிலையம் வந்தது. பஸ் நிலையத்தில் காலை நேரம் என்பதால், மாணவ– மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பஸ்சுக்காக  காத்து நின்றனர். 

ஆட்டை கடித்தது

வெறிநாயை கண்டதும், பொதுமக்கள் அதை துரத்தினர். தொடர்ந்து, பஸ் நிலையத்தின் வெளியே வந்த நாய், அந்த பகுதியில் சாலையோரம் கட்டி வைத்திருந்த ஒரு ஆட்டை கடித்து குதறியது. பின்னர், அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்து நின்ற மாணவிகளை துரத்த தொடங்கியது.

இதற்கிடையே அந்த வழியாக வந்த பஸ் வெறிநாய் மீது மோதியது. இதில் அந்த நாய் சம்பவ இடத்திலேயே செத்தது. வெறிநாய் என்பதால், அதை யாரும் அப்புறப்படுத்த முன்வரவில்லை. காலை வேளையில்  இந்த வெறிநாயின் அட்டகாசம் திருவட்டார் பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 comments: