Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் கொடி நாள் நிதியாக வசூலிக்கப்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித் துள்ளார்.

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள் ளதாவது:-

கொடிநாள் நிதி

முன்னாள் படைவீரர் களுக்கு என தமிழக அரசு சார்பில் ‘கொடிநாள்‘ தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதற்காக முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இருந்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கென ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் நிதி வசூல் இலக்காக நிர்ணயிக்கப் பட்டு ரசீது புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் ரசீது புத்தகங்கள் வழங்கப் பட்டுள்ளன. அதன்படி, மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.7 லட்சம் கொடிநாள் நிதி வசூல் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய அலுவலகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை, பொதுமக்களிடம் ரசீது கொடுத்து வசூல் செய்யப் பட்டது. மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அதற்கான பாராட்டு பத்திரம், சான்றிதழை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

புகார் தெரிவிக்கலாம்

கொடிநாள் ரசீது புத்தகம் ரூ. 50, 100 என அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 60 சதவீதம் அதாவது சுமார் ரூ. 4½ லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், கொடி ரசீது இல்லாமல் வெளிநபர் மற்றும் முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் வட்டார போக்கு வரத்து அலுவலரிடம் நேரில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் பழனிசாமி தெரிவித் துள்ளார்.

0 comments: