Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
திருப்பூரில் பனியன் வியாபாரியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பனியன் வியாபாரிதிருப்பூர் காலேஜ் ரோடு சாதிக்பாட்சா நகரை சேர்ந்த முகமதுவின் மகன் அப்துல்ஹக்கீம்(வயது 26). இவர் திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள காதர்பேட்டை பகுதியில் கடைவைத்து இரண்டாம் தர பனியன் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்தநிலையில் வியாபார நிமித்தமாக பனியன்கள் கொள்முதல் செய்வதற்கு திருப்பூர் ராம்நகர் 3–வது வீதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு தனது காரில் தனியாக சென்றார். அப்போது ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து தனது அருகில் வைத்திருந்தார்.
மிளகாய்பொடி தூவி பணம் பறிப்புபனியன் நிறுவனம் அருகில் காரை நிறுத்திய சில வினாடிகளில் காரின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவன், அப்துல்ஹக்கீம் முகத்தில் மிளகாய் பொடியை தூவினான். உடனே அப்துல்ஹக்கீம் பணப்பையை பிடித்துக்கொள்ள முயன்றார். அதற்குள் அவரிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு அங்கிருந்து அந்த ஆசாமி கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றான். இதுபற்றி அப்துல்ஹக்கீம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
அக்கம்பக்கத்தினர் அப்துல் ஹக்கீமை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அப்துல்ஹக்கீம் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் ஜெயசந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகரன், சேகர்சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்துடன் சென்ற மர்ம ஆசாமியை பிடிக்க அனைத்து சோதனைச்சாவடிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு நள்ளிரவு முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

0 comments: