Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் டவுன் பஸ்களில் விதிமுறைக்குப் புறம்பாக
அதிக கட்டணம் நிர்ணயித்து போக்குவரத்து அதிகாரிகள் முறைகேடு:









கட்டணத்தைக் குறைக்க மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், செப்.29-
திருப்பூர் நகர, புறநகரப் பேருந்துகளில் விதிமுறைக்குப் புறம்பாக கூடுதல் கட்டணம் வசூலிக்கும் போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சாமானிய மக்களை பாதிக்கும் இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ் கடிதம் எழுதியுள்ளார். இதில் கூறப்பட்டுள்ளதாவது: மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டம் கடந்த 26 அன்று நடைபெற்றது. இதில்திருப்பூர் வட்டாரத்தில் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகரம் மற்றும் சுற்றியுள்ள அவிநாசிபல்லடம்ஊத்துக்குளி,நம்பியூர்பெருமாநல்லூர்சேவூர்கருவலூர்கருமத்தப்பட்டி,சோமனூர்கொடுவாய் உள்ளிட்ட ஊர்களுக்கும்சுற்றுவட்டார கிராமங்களுக்கும் இயக்கப்படும் 127 நகரபுறநகர பேருந்துகளில்எல்.எஸ்.எஸ் ஆக 120-ம்எக்ஸ்பிரஸாக 6ம்சாதாரணக்கட்டணத்தில் ஒரேயொரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதாகவும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டபபடி  பெறப்பட்ட கடிதத்தில் 42பேருந்துகள் சாதாரண கட்டணத்தில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு வகையினங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கொடுத்திருக்கும் பட்டியலில்எல்எஸ்எஸ் வகையினங்கள் என குறிப்பிடப்பட்டிருக்கும் பேருந்துவழித்தடங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பட்டியலில்சாதாரணக் கட்டணப் பேருந்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளன.இதன்மூலம் மேற்படி 42 பேருந்துகள் விதிமுறைக்குப் புறம்பாககூடுதல் கட்டணப் பேருந்துகளாக இயக்கப்படுவது உறுதியாகிறது.
அதேபோல் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தகவல் பெறும் உரிமை சட்டப்படி பெறப்பட்ட கடிதத்தில், 137நகரப் பேருந்துகள் இயக்க அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் அவை எந்த வகையினத்தில்இயக்கப்படுகின்றன என்று எழுத்துப்பூர்வமாக பட்டியல் தரமறுத்துவிட்டார்அந்த நகரப் பேருந்துகளை சாதாரணக்கட்டணத்தில்தான் இயக்கப்பட வேண்டும் என்றும் தெரிகிறது.இதிலும் விதிமுறைக்குப் புறம்பாக எல்எஸ்எஸ்எக்ஸ்பிரஸ்பேருந்துகளை அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் இயக்குவது உறுதியாகிறது.
இது மட்டுமின்றிஅந்த எல்எஸ்எஸ்., எக்ஸ்பிரஸ் பேருந்துகளுக்கும் சட்டப்படி நிர்ணயித்துள்ள கட்டணங்களைவிட கூடுதல் கட்டணங்களை அரசு போக்குவரத்துக்  கழக அதிகாரிகள் தன்னிச்சையாக வசூலித்து வருகின்றனர். அரசாணைப்படி சாதாரண பேருந்துகளில் ரூ.3.00, எல்.எஸ்.எஸ் பேருந்துகளில் ரூ.3.50ம், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ.4.50ம்  என  குறைந்தபட்ச கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சராசரியாக இரண்டு கி.மீ. தூரத்திற்கு ஒரு நிலை (ஸ்டேஜ்) என வரையறுத்துஒரே வீத கட்டணம்தான் வசூலிக்க வேண்டுமென்று அரசாணை சொல்கிறது. 
ஆனால் திருப்பூரில் சாதாரண பேருந்து சேவை என்பதே நடைமுறையில் இல்லை. கிட்டத்தட்ட அனைத்துப் பேருந்துகளிலும் ரூ.4 வீதமும், அதிவிரைவுப் பேருந்துகளில் ரூ.5 வீதமும் குறைந்தபட்சக் கட்டணம் வசூலிக்கப்படுவதுடன்ஸ்டேஜ் நிர்ணயத்திலும் போக்குவரத்து துறை முறைகேடு செய்து கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது.
மற்ற மாநகரங்கள்மாவட்டங்களில், குறிப்பாகச் சென்னையில் கூட குறைந்தபட்ச பயணக் கட்டணம் ரூ.3ஆகத்ததான் உள்ளது. இங்கு மட்டும் கடும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. கடந்த செப்டம்பர் 11ம் தேதியிட்ட அரசுப்போக்குவரத்துக் கழகம் கோவை மண்டல அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அவினாசி புதிய பேருந்து நிலையத்திற்கு எல்.எஸ்.எஸ் பேருந்தில் ரு.6.00ம்சாதாரண பேருந்தில் ரு.5.00ம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் நடைமுறையில் எல்.எஸ்.எஸ் பேருந்துகளில் ரூ.8.00-ம்,எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரு.11.00-ம் வசூலிக்கப்படுகிறது.
முதல்வரின் தனிப்பிரிவிற்கு எமது கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவுக்கு பதில் அளித்துள்ள போக்குவரத்து துறை அதிகாரிகள் 2011ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி முதல் பேருந்து கட்டண உயர்வு அமலில் இருந்து வருவதாக கூறியுள்ளனர். ஆனால் வேறெங்கும் இல்லாமல் திருப்பூரில் மட்டும் அரசாணை மற்றும் விதிமுறைகளை மீறி கட்டண உயர்வு செய்து பயணிகளின் நம்பிக்கைக்கு மோசடி செய்துள்ளனர்.
போக்குவரத்து அதிகாரிகள் விதிமீறல் செய்துள்ளது தெரியவந்த நிலையில்கட்டண உயர்வைக் குறைத்து சீர்செய்வதற்கு மாறாக, சமாளித்து ஏமாற்றக்கூடிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒரு அரசுத்துறையின் இத்தகைய அணுகுமுறை எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. ஏற்கனவே பலவித நெருக்கடியில் உள்ள சாதாரண ஏழை, எளிய மக்களை மேலும் கஷ்டப்படுத்தும் நடவடிக்கையாகவே போக்குவரத்து துறையின் செயல்பாடு அமைந்துள்ளது. 
லட்சக்கணக்கான சாமானிய தொழிலாளர்கள் திருப்பூருக்கு வேலைநிமித்தமாக தினந்தோறும் வந்து செல்லும் நிலையில் இது போன்ற கட்டணச் சுரண்டலை ஏற்க முடியாது. ஆகவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சாதாரணக் கட்டணப் பேருந்துகளுக்கான விதிமுறைப்படி குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
(இத்துடன் கடிதம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி, மண்டல போக்குவரத்து அதிகாரி ஆகியோரிடம் பெறப்பட்ட விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)
---------------------

0 comments: