Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
கருங்கல் அருகே மிடாலம் பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றம் நிலவி வருவதால், கடற்கரையோர மக்கள், உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கடல் சீற்றம்

குமரி மாவட்ட கடற்கரை பகுதியில் கடந்த ஓரிரு தினங்களாக கடல்சீற்றம் நிலவி வருகிறது. கடலில் ராட்சத அலைகள் தோன்றி, தடுப்பு சுவர் இல்லாத இடங்களிலும், தடுப்புசுவர் பழுதடைந்த பகுதிகளிலும் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், கடற்கரையோர சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கருங்கல் அருகே மிடாலம், மேல்மிடா லம் பகுதியில் நேற்றும் கடல் சீற்றம் தொடர்ந்து நீடித்தது. இந்த கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் 1986-ம் ஆண்டு தடுப்பு சுவர் கட்டப்பட்டது. தற்போது, இந்த தடுப்புச்சுவர் சேத மடைந்த நிலையில் காணப் படுகிறது.

உறவினர் வீடுகளில் தஞ்சம்

இந்த பகுதியில் கடந்த ஓரிரு தினங்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கடலரிப்பு ஏற்பட்டு பல வீடுகள் இடியும் நிலையில் உள்ளன.

இதனால், கடற்கரையோர பகுதி மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள் ளனர். எனவே, இந்த பகுதியில் கடலரிப்பை தடுக்கும் வகையில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிடாலம் பங்கு அருட் பணியாளர் ஜாண்ராபின்சன், ஊர்தலைவர் சிவில் ஆகியோர் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

0 comments: