Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
காங்கயத்தை அடுத்துள்ள பொங்கலூரில் பழைய துணிக்கடைக்காரராக இருப்பவர் சரவணன். இவரது மகள் சங்கீதா (வயது 23). இவர் தனது தந்தை சரவணணுக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்தார்.
கடந்த 10–7–2014 அன்று கடையில் தனியாக இருந்த சங்கீதா மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் விசாரித்த போது பொங்கலூரில் துணி வியாபாரம் செய்து வந்த திருப்பூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் திருமண ஆசை காட்டி சங்கீதாவை அழைத்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சரவணன் அவினாசிபாளையம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 2 மாதங்களுக்கு மேலாகியும் சங்கீதா குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.

0 comments: