Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றைய பெண்களின் மாறிவரும் பங்கும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் டி.ஜி.பி. கிரண்பேடி பேசியதாவது:–
படித்த மக்கள் மனதிலும் ஆண், பெண் பாகுபாடு நிலவுகிறது. இந்த வேறுபாட்டை நீக்க பெண்கள் முன்வர வேண்டும். இதற்கு கட்டாயமாக கல்வி அறிவு வேண்டும்.
எந்த துறையிலும் ஆண்களை போல பெண்களும் மிக வலிமையுடன் செயல்பட முடியும். 80 சதவீத பெண்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். 10 சதவீத மக்கள் தான் நாட்டுக்காக உழைக்கிறார்கள்.
பெண்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் தங்கள் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். உயர வேண்டும். சுயதொழில் புரிவதற்கு பெண்கள் முன்வர வேண்டும். தலைமை பொறுப்பை ஏற்று நிறுவனங்களை நடத்த வேண்டும்.
பெண்கள் மீதான வன்கொடுமைகள் மற்றும் பாலியல் தொந்தரவு இன்னும் சமுதாயத்தில் நிலவி வருகிறது. இதனை ஒழிக்க பெண்கள் தான் முன்வரவேண்டும் என்றார்.
தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மோடியின் ஆட்சி குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடியின் 100 நாள் ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
சாதாரணமானவர்களும் மின்னஞ்சல் மூலம் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: