Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by Unknown   

இலங்கையில் நடைபெற்றது ஓர் இனப்படுகொலையே என பிரித்தானியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் டேவிட் பிளங்கட் தெரிவித்துள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் மீது ஓர் சர்வதேச விசாரணைக்கான மேலதிக அழுத்தத்தை பிரித்தானியா ஏற்படுத்த வேண்டுமெனவும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடைசெய்வதன் மூலம் தமிழர்களின் மீது தீவிரவாதப் பட்டத்தை கட்டும் இலங்கை அரசின் நடவடிக்கையை எதிர்க்குமாறு கோரவும் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் பிரிந்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.
அந்த சந்திப்பின்போது கருத்துக்களை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் டேவிட் பிளங்கட்,இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மீது ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார். அத்தோடு ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்காமைக்கு தமது கண்டனத்தையும் வெளியிட்டார்.



0 comments: