Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர்,செப்.15-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பெருந்தகை பேரறிஞர் அண்ணாவின் 106வது பிறந்த நாளையொட்டி திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்புறம் அன்னாரது திருவுருவப்படத்துக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில் வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எம்.மணி, 45வது வார்டு வேட்பாளர் எம்.கண்ணப்பன், மாணவர் அணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் நா.சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் ஏ.கருணாகரன், மாவட்ட  அம்மா பேரவைத்தலைவர் அட்லஸ் சி.லோகநாதன், துணை செயலாளர் உஷா ரவிக்குமார், விவசாய பிரிவு இணை செயலாளர் எஸ்பி.என்.பழனிசாமி, நகர அண்ணா தொழிற்சங்க செயலாளர் சி.எஸ்.கண்ணபிரான், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர் ஏ.சாகுல்ஹமீது, வளர்மதி தாமோதரன், இலக்கிய அணி நிர்வாகிகள் பி.கே.எஸ்.சடையப்பன், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித் ரத்தினம், இளைஞர் அணி ஆர்.ரத்தினகுமார், அசோக்குமார், நீதிராஜன், பாசறை நிர்வாகிகள் பி.லோகநாதன், பரமராஜன், மாமன்ற உறுப்பினர் கே.செல்வம், ஹோட்டல் சங்க செயலாளர்கள் வினோத்குமார், முபாரக், அண்ணா நடைபாதை  நிர்வாகிகள் பஸ் ஸ்டாண்ட் சாதிக்பாஷா, ராமநாதன், அசோக்குமார், கேபிள் பாலு, விஸ்வநாதன், சேகர், சி.டி.சி.கிளை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொன்னுசாமி, ராஜேந்திரன், சரவணன், ரவிக்குமார், முருகன், தலைமை கழக பேச்சாளர்கள்  டி.ஏ.பாலகிருஷ்ணன், எம்.ஜி.குணசேகர் உள்ளிட்டவர்களும் மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி, சுந்தரம்பாள், முத்துலட்சுமி, இந்திராணி, ரசூல் மும்தாஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்லடம் நகர, ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் என்.ஜி.ஆர்.ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, நகர பொருளாளர் சூ.தர்மராஜன், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் ப.நடராஜ்,மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கரைபுதூர் நடராஜன், மாவட்ட கழக துணை செயலாளர் ஜோதிமணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ராதேவி, நகர தலைவர் தங்கவேல்,ஒன்றிய துணை செயலாளர் சித்துராஜ், பேரவை நிர்வாகிகள் முருகசாமி, ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் கிருஷ்ணகுமார், ராஜேந்திரன், மற்றும் துரைகண்ணன், பாரதி செல்வராஜ், தமிழ்நாடு பழனிசாமி, வெண்ணை சுப்பிரமணி, மாரிமுத்து, ஞானாம்பிகா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: