Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகேயுள்ள நடுப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் பூங்கொடி(வயது 48). கடந்த 20 ஆண்டுக்கு முன்பு பூங்கொடியை பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
இல்வாழ்க்கை சரியாக அமையாததால் பூங்கொடி தனது தாய் வீட்டுக்கு திரும்பி வந்து விட்டார். தனது பெற்றோருடன் வசித்து வந்தார். வயிற்று பிழைப்புக்காக ஆடு, மாடு மேய்த்து வந்தார். பெற்றோர் இறந்த பின்னர் தனியே வசித்து வந்தார்.
இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பூங்கொடி ராசாத்தாவலசு வெள்ளப் பாறைக்காடு என்ற இடத்தில் இறந்து கிடந்தார். இறந்து சில நாட்கள் இருக்கும் எனத்தெரிகிறது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து பூங்கொடியின் சகோதரர் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விரைந்து வந்து பூங்கொடியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

0 comments: