Monday, September 15, 2014
திருப்பூர் 22 மற்றும் 45–வது வார்டுகளுக்கான வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் அடங்கிய பட்டியல் பொருத்தும் பணி நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி அதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 22 மற்றும் 45–வது வார்டுகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் 22–வது வார்டில் 8 வாக்குப்பதிவு மையங்களும், 45–வது வார்டில் 12 வாக்குப்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு 20 எந்திரங்கள் மற்றும் 10 ரிசர்வ் எந்திரங்கள் என மொத்தம் 30 எந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகர கமிஷனருமான அசோகன் தலைமையில், 22–வது மற்றும் 45–வது வார்டில் போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில், உதவி தேர்தல் நடத்து அதிகாரிகள் திருமுருகன், தமிழ்செல்வன் ஆகியோர் மேற்பார்வையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. மேலும் வாக்குப்பதிவு மையங்களில் உபயோகப்படுத்தப்படும் பென்சில், ரப்பர், மெழுகு, மை உள்ளிட்ட பொருட்கள் ஒவ்வொரு மையங்களுக்கும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு மையங்களுக்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 

0 comments:
Post a Comment