Saturday, September 27, 2014

On Saturday, September 27, 2014 by farook press in ,    
திருப்பூரில் தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. பள்ளி கல்வியை பாதியிலேயே விட்டவர்கள் மீண்டும் கல்வியை தொடரும் வகையில் 8–ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த தனி தேர்வர்களுக்கும் பொதுத்தேர்வு நேற்று நடைபெற்றது.
இதன்படி மாவட்டம் முழுவதிலும் இருந்து 8–ம் வகுப்பு தேர்வுக்கு 815 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத கே.எஸ்.சி. அரசு பள்ளி, சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி ஆகிய 2 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 621 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுத வந்திருந்தனர். 194 பேர் வரவில்லை. அதைபோல எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த 252 பேருக்கு பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 213 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 39 பேர் வரவில்லை. பிளஸ்–2 தேர்வுக்கு விண்ணப்பித்ததிருந்த 96 பேருக்கு தாராபுரம் விவேகம் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 74 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 22 பேர் வரவில்லை.

0 comments: