Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by Unknown in ,    
மதுரை மாநகராட்சி பகுதிகளில் 40 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்படுகிறது என்று ஆணையாளர் கதிரவன் தகவல்
இது குறித்து கமிஷனர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இந்திய அரசு சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை எஸ். ஓ. 249 (இ) நாள் 4.2.2011 தேதிய அறிவிக்கையின்படி 40 மைக்ரான் அளவிற்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது 11.9.2014 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குள் 40 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது மீறினால் மதுரை மாநகராட்சி சட்டப்படி தயாரிப்பவர், விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மொத்த விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.500ம், சில்லறை விற்பனை செய்பவர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.200ம், உபயோகிப்பாளர்களுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் நிர்வாக செலவினக் கட்டணமாக ரூ.100ம் அபராதம் விதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் 40 மைக்ரான் குறைவான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 comments: