Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
தமிழகத்தின் முக்கியமான தத்துவ மாத இதழான "மார்க்சிஸ்ட்" வெள்ளிவிழாவை முன்னிட்டு திருப்பூரில் செப்டம்பர் 25ம் தேதி வியாழக்கிழமை சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அரிசிக்கடை வீதியில் வியாழனன்று மாலை நடைபெறும் இக்கருத்தரங்கில் "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மையும், 370வது பிரிவும்" என்ற தலைப்பில் அறிஞர்கள் பங்கேற்று கருத்துரை வழங்குகின்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் மாத இதழ் ஆசிரியர் குழு சார்பில் பேராசிரியர் சந்திரா அறிமுக உரை ஆற்றுகிறார். பேராசிரியர் அருணன், பத்திரிகையாளர் ஞானி, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்எல்ஏ., ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் மார்க்சிஸ்ட் மாத இதழுக்கான ஆண்டு சந்தாக்களை வழங்க உள்ளனர். முன்னதாக திருப்பூர் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிறைவாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் நன்றி கூறுகிறார்.

0 comments: