Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் நியாயமான போனஸ் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி அக்டோபர் 7ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துதென சிஐடியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
திருப்பூரில் சிஐடியு பனியன் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம்  செவ்வாயன்று அவிநாசி சாலை தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கே.காமராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சி.மூர்த்தி, செயலாளர்கள் ஜி.சம்பத், எம்.என்.நடராஜ், கே.நாகராஜன், ஆர்.மாணிக்கம், துணைத் தலைவர்கள் எம்.சந்திரன், ரவி, பொருளாளர் வி.நடராசன் மற்றும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:
திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் உடனடியாக நியாயமான போனஸ் வழங்க கோரி வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி ஆயிரக்காணக்கான தொழிலாளர்களை திரட்டி திருப்பூர் குமரன் சிலை அருகில் மாபெரும் ஆர்பாட்டம் நடத்துவது என்றும், அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் 20 நாட்களுக்கு முன்பு நியாயமான போனஸ் வழங்க கேட்டு பனியன் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும், கம்பெனி நிர்வாகத்திற்கும் கடிதம் அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
​----------​

0 comments: