Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகரில் செல்போன் பேசுபவர்கள் மீது அபராதம் விதிக்கவும்,  இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் தலை கவசம் அணிய வேண்டும் எனவும்  மாநகர ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் அதனால் ஏற்படும் வாகன விபத்துகளை தவிர்க்கவும் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்ற சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. எனவே வாகன ஓட்டுநர்கள் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என மாநகர காவல் ஆணையகரத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வாகன ஓட்டுநர்கள் செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் மோட்டார் வாகன சட்ட விதிமீறல் குற்றம் சாட்டப்பட்டு செல்போன் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து அபராதம் விதிக்கப்படும். 
அதே போல பெரும்பாலான வாகன விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால் உயிர் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் குடிபோதையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்புகள் நடப்பதால் இனி வரும் காலங்களில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதனையும், மேலும் குடி போதையில் வாகனம் ஓட்டினால் வாகன ஓட்டுநாரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கையும் எடுக்கப்படும் என தொரிவித்துக் கொள்ளப்படுகிறது. 
பொதுமக்கள் காவல் துறைக்கு தாங்கள் ஒத்துழைப்பு கொடுத்திடவும், விபத்தில்லா திருப்பூர் மாநகரம் உருவாக்கவும் இணைந்து செயல்பட வேண்டி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்டவாறு மாநகர ஆணையாளர் ஷேசாய் அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்..

0 comments: