Wednesday, September 10, 2014

On Wednesday, September 10, 2014 by Unknown in ,    
 



உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பாலசுப்பிரமணியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு, கே.ஏ.சக்திவேலு, உடுமலை ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடேசன் செல்வகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றார்கள்.
இவர்கள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:–
அ.தி.மு.க.வினர், குறிப்பாக நிர்வாகிகள் அனைவரும் இரவு பகல் பாராது ஓய்வு இல்லாமல், ஒரே அணியாக நின்று ஒற்றுமையுடன் பணியாற்றிட வேண்டும். தமிழக முதல்வர் அம்மா ஆட்சியில் ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்துமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அரசின் சாதனைகள், ஏழைகளுக்கு செய்துள்ள சாதனைகளை வீடு வீடாக சென்று விளக்கி ஆதரவு தேட வேண்டும்.
இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

0 comments: