Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
நடமாடும் மண் பரிசோதனை நிலைய ஆய்வு ஊர்தி ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. 22–ந் தேதி பழவிளை வேளாண்மை விரிவாக்க மையத்திலும், 23–ந் தேதி காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், 24–ந் தேதி மூஞ்சிரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், 25–ந் தேதி தர்மபுரம் பஞ்சாயத்து அலுவலகத்திலும், 26–ந் தேதி ஈத்தாமொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும், 29–ந் தேதி பறக்கை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் மண் ஆய்வுப்பணியை மேற்கொள்கிறது.
எனவே விவசாயிகள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மண் மாதிரி முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

0 comments: