Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
நாகர்கோவிலில் பேராசிரியர் வீட்டில் கதவை உடைத்து டி.வி. உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுபற்றிய விவரம் வருமாறு:–
பேராசிரியர்
நாகர்கோவில் கல்லூரி ரோடு நீல் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டாலின் ஜேக்கப். இவருடைய மனைவி ஜெனிபர். இவர்கள் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள் நேற்று முன்தினம் மாலை தக்கலை கல்குறிச்சி பகுதியில் உள்ள ஜெனிபரின் தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை இவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் மூலம் தகவல் கிடைத்தது.
கொள்ளை
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் ஜேக்கப் அங்கிருந்து நாகர்கோவிலுக்கு விரைந்து வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. எல்.இ.டி. டி.வி., டி.வி.டி. பிளேயர், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட சில பொருட்களை காணவில்லை. பீரோவும் திறந்து கிடந்தது. பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாததால் வேறெதுவும் திருட்டு போகவில்லை.
வீடு பூட்டிக்கிடந்ததைப் பார்த்து யாரோ மர்ம மனிதர்கள் சுத்தியலால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய சுத்தியல் அருகில் கிடந்தது.
இந்த கொள்ளை பற்றி வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சென்று ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் என போலீஸ் தரப்பில் கணக்கிடப்பட்டு உள்ளது. இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஆம்லெட்‘ சாப்பிட்ட கொள்ளையர்கள்
கொள்ளை நடந்த பேராசிரியர் வீட்டில் கொள்ளையர்கள் மிகவும் சாவகாசமாக கொள்ளையடித்துள்ளனர். கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்களுக்கு மிகவும் பசித்துவிட்டது போலும். இதனால் வீட்டில் இருந்த முட்டைகளை எடுத்து ‘ஆம்லெட்‘ போட்டு சாப்பிட்டுள்ளனர். மேலும் குளிர்சாதன பெட்டியில் இருந்த பாலை எடுத்து காய்ச்சி குடித்துள்ளனர். கொள்ளையர்களில் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த பழக்கம் உள்ள கொள்ளையர்களை போலீசார் குறி வைத்துள்ளனர்.

0 comments: