Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
தட்டார்மடம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டையைச் சேர்ந்தவர், காசியானந்தம் (வயது 60). தொழில் அதிபர்.
இவர் கடந்த 12–ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்தினருடன் சென்னையில் நடந்த உறவினரின் திருமண விழாவுக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவில் காசியானந்தம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்தனர். ஆனால் அங்கு நகை, பணம் இல்லை. பின்னர் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
நேற்று முன்தினம் காசியானந்தம் தனது குடும்பத்தினருடன் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் கொள்ளை முயற்சி நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், தட்டார்மடம் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் பால் ஐசக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

0 comments: