Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூங்கில் தொழுவு ஊராட்சியின் தலைவராக இருந்த சி.மகேந்திரன் நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து காலியாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வரும் 18–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த மாசிலாமணி நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரான குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளர் செல்வராஜிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் சி.மகேந்திரன் எம்.பி, ஒன்றியக்குழு தலைவர் முருகன், மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கனகராஜ், ஒன்றிய கவுன்சிலர் மயில்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: