Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
உடுமலை கார்த்திகை விழா மன்றத்தின் சார்பில் 53–ம்ஆண்டு நவராத்திரி இசை இலக்கிய கலை விழா உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் கடந்த 25–ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவையொட்டி தினசரி மாலையில் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன்படி திருமுறை இசை அரங்கம், சிறப்பு இசை நிகழ்ச்சி, சிறப்பு வீணை இசை நிகழ்ச்சி ஆகியவை நடந்தன.
நேற்று முன்தினம் உடுமலை டாக்டர்கள் எம்.தாமரைச்செல்வன், பி.கே.ஸ்ரீதேவி தாமரைச்செல்வன் தம்பதியினரின் மகன் 6–ம் வகுப்பு மாணவர் டி.அதீதன் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் வீணை இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு டாக்டர் எம்.அசோக் தலைமை தாங்கினார். கார்த்திகை விழா மன்ற செயலாளர் அங்கு பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கார்த்திகை விழா கமிட்டி உறுப்பினர் எம்.சாய்சரவணகுமார், சத்யம்பாபு உள்பட பலர் வாழ்த்தி பேசினார்.

0 comments: