Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
உடுமலை ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டராக்ட் மற்றும் இண்டராக்ட் சங்கங்கள் தொடக்க விழா உடுமலை ஐஸ்வர்யா நகரில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிட ஹாலில் நடந்தது. விழாவிற்கு ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் ஸ்ரீதரன்நம்பியார் தலைமை தாங்கினார். விழாவில் ஸ்ரீ ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், உடுமலை அரசு கலைக்கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்.கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், ஸ்ரீ ஜி.வி.ஜி மேல்நிலைப்பள்ளி இண்ட்ராக்ட் சங்கம், வித்யநேத்ரா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி இண்ட்ராக்ட் சங்கம், ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி இண்ட்ராக்ட் சங்கம், செப்பைரஸ் பள்ளி இண்ட்ராக்ட் சங்கம் ஆகிய சங்கங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த சங்க நிர்வாகிகளுக்கு ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் ஸ்ரீதரன்நம்பியார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரிடம் ஜம்முகாஷ்மீர் வெள்ள நிவாரண தொகையாக வித்யநேத்ரா மற்றும் செப்ரைஸ் இண்ட்டராக்ட் சங்கம் ரூ.1லட்சத்து 16ஆயிரத்து 600–ம், ஸ்ரீ ஆதர்ஷ் பள்ளி இண்ட்ராக்ட் சங்கம் ரூ.1லட்சத்து 13 ஆயிரத்து 380–ம், சைனிக் பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் ரூ.5ஆயிரம், ஸ்ரீ ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம் ரூ.45 ஆயிரமும், காந்திநகர் ரோட்டராக்ட் சங்கம் ரூ.25ஆயிரம், உடுமலை ரோட்டரி சங்கம் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 100 வழங்கியது. விழாவில் ரோட்டர் சங்க மாவட்ட செயலாளர்கள் டி.ஜெகதீசன், வக்கீல் மோகன்ராஜ், ஸ்ரீ.ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி முதல்வர் ஜி.சுகுணா, ரோட்டராக்ட் இளைஞர் பிரிவு தலைவர் ஆர்.அருண்கார்த்திக், உடுமலை ரோட்டரி சங்க தலைவர் தேவசிகுட்டி ஜோஸ், ரோட்டரி மாவட்ட துணை ஆளுனர் டி.ரத்தினவேல் ஆகியோர் பேசினர். முடிவில் சங்க செயலாளர் ஆடிட்டர் எஸ்.சிவப்பிரகாஷ் நன்றி கூறினார்.

0 comments: